UPDATED : மார் 07, 2011 12:00 AM
ADDED : மார் 07, 2011 04:58 PM
அவற்றின் சேர்க்கை முறைகள் வித்தியாசப்படுகின்றன. மாணவர்கள் பயன் அடையும் விதத்தில் சிறந்த கல்வி நிலையங்கள் சிலவற்றில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, தகுதி, தேர்வு முறைகள் பற்றி இங்கு காணலாம்.
அமிர்தா இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏஇஇ)
அமிர்தா விஷ்வா வித்யாபீத் ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய அளவில் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. 4 ஆண்டுகள் பயிலும் பி.டெக். படிப்பிற்கு 1240 இடங்கள் உள்ளன. அமிர்தபுரியின் கல்வி நிலையங்கள் கொல்லம், பெங்களூரு, எட்டிமடை (கோயம்பத்தூர்) ஆகிய மூன்று இடங்களில் உள்ளன. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ரூ.850க்கு கிடைக்கும். விண்ணப்பத்தை நேரடியாக அந்தந்த கல்லூரிகளிலோ, ஆக்ஸிஸ் வங்கி மூலம் பணம் செலுத்தியோ பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வசதியும் உள்ளது.
கல்வித் தகுதி : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : 120 அப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வை எழுத 3 மணி நேரம் வழங்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பதிலுக்கும் 3 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் கலந்தாய்வு மூலமாக பி.டெக். வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவல்கள் பெற, www.amirta.edu/admissions என்ற இணையதளத்தைக் காணலாம்.
அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.)
இந்திய அளவில் சிபிஎஸ்இ-யால் நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வு பி.இ./பி.டெக்., படிப்புகளுக்கானதாகும். இதற்கான விண்ணப்பத்தினை ரூ.500 செலுத்தி சிபிஎஸ்இ உள்ளூர் அலுவலகங்களிலோ அல்லது சின்டிகேட் வங்கியின் கிளைகளிலோ பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஆன்லைனிலும் பூர்த்தி செய்யலாம்.
இந்த நுழைவுத் தேர்வு முடிவின் மதிப்பெண்களைப் பயன்படுத்தி டெல்லி டெக்னாலஜிகல் யூனிவர்சிட்டி (டி.டி.யு.), பி.யி.சி. யூனிவர்சிட்டி, பி.ஐ.டி. பெஸ்ரா, ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர், சாஸ்த்ரா போன்ற முன்னணி கல்வி நிலையங்களிலும் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறலாம்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான வகுப்பில் 50%மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
தேர்ந்தெடுக்கும் முறை : 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண் உண்டு. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். நுழைவுத் தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.aieee.nic.in
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சைன்ஸ் அட்மிஷன் டெஸ்ட் (பி.ஐ.டி.எஸ்.ஏ.டி.)
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ், பிலானி, ஹைதராபாத், கோவாவில் உள்ள தனது கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. இந்த நிலையத்தில் 2500 இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பி.ஐ.டி.எஸ்.ஏ.டி. தேர்விற்கு பதிவு செய்ய ஆன்லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ரூ.1,500 (பெண்களுக்கு ரூ.1000) கட்டணத்துடன் பிலானியில் உள்ள பிஐடி கல்வி நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் 80 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு நிகரான வகுப்பில் 60 / மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : பிட்சாட் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் 150 கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் கேள்விகளில் சரியான பதிலை தேர்வு செய்தால் 3 மதிப்பெண்ணும், தவறான பதிலுக்கு 1 நெகடிவ் மதிப்பெண்ணும் வழங்கப்படும். நெகடிவ் மதிப்பெண் சரியான மதிப்பெண்ணில் இருந்து கழிக்கப்படும். கேள்விகள் இயற்பியல் (40), வேதியியல் (40), ஆங்கிலம் பிரொவிசியன்ஸி (15), லாஜிகல் ரீசனிங் (10), கணிதம் (45) ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படும். மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு www.bitsadmission.com இணையதளத்தை பார்க்கலாம்.
பாரதிய வித்யாபீத் இன்ஜினியரிங்கிற்கான நுழைவுத் தேர்வு (பி.வி.பி.இ.இ.)
இந்தியாவில் பாரதிய வித்யாபீத் யூனிவர்சிட்டி மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுமார் 700 சேர்க்கை இடங்களுக்காக அதிக அளவிலான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். புனேயில் உள்ள இந்த யூனிவர்சிட்டியின் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல்கள் அடங்கிய புத்தகம் ரூ.1000க்குக் கிடைக்கும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 100 கேள்வியும், இயற்பியலில் 100 கேள்வியும் கேட்கப்படும். 11, 12ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, www.bharatividyapeeth.edu
மேலும் சில கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வு பற்றிய விவரங்கள் வரும் 9 ஆம் தேதி வெளியிடப்படும்.
