தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் துயர் இனி நீங்குமா?

வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் துயர் இனி நீங்குமா?

வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் துயர் இனி நீங்குமா?


UPDATED : மார் 09, 2011 12:00 AM

ADDED : மார் 09, 2011 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2011 12:00 AM ADDED : மார் 09, 2011 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில் அமெரிக்காவின் ட்ரை-வேலி பல்கலை விஷயத்தில் இந்திய மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தரும் ஏஜென்ட்டுகள் முறையாக செயல்பட்டிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது.


நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட உள்ள "குடியேற்ற மேலாண்மை மசோதாவில்" சில திருத்தங்களை செய்ய மனிதவள அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஏஜென்டுகளின் கட்டாய பதிவு மற்றும் மாணவர்களின் டேட்டாபேஸ் உருவாக்குதல் போன்ற அம்சங்கள் மனிதவள அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


குடியேற்ற மேலாண்மை மசோதாவானது, குடியேற்ற செயல்பாட்டை எளிமையாகவும், சட்டப்பூர்வமானதாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் உள்ளது. இந்த மசோதா கூடிய விரைவில் கேபினெட் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.


தற்போது வரை, யார் யார் வெளிநாட்டிற்கு சென்று படித்துக் கொண்டுள்ளார்கள் என்பதைப் பற்றிய தெளிவான டேட்டாபேஸ் அரசிடம் இல்லை. இதனால் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us