தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ்

மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ்

மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ்


UPDATED : மார் 09, 2011 12:00 AM

ADDED : மார் 09, 2011 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2011 12:00 AM ADDED : மார் 09, 2011 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தின் பரிசாக இந்த இலவச ரயில் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே பட்ஜெட்டின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மம்தா பானர்ஜி, உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு உள்ளூர் ரயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.


இதன் மூலம், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க தனி மையங்களை ரயில்வே துவங்கும் என்றும் அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us