யு.பி.பி.சி.எல்., நிறுவனத்தில் இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்கள்
யு.பி.பி.சி.எல்., நிறுவனத்தில் இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்கள்
UPDATED : மார் 10, 2011 12:00 AM
ADDED : மார் 10, 2011 03:59 PM
மின்சார உற்பத்தியில் உத்தரப் பிரதேஷ் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கென்று ஒரு தனி இடம் உண்டு. உத்திரப் பிரதேச மாநிலத்தின் மின் தேவைகளை குறைந்த செலவில் திறம்பட வழங்குவதில் இந்த நிறுவனம் பெயர் பெற்றது. இங்கு பணி புரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும், இந்த நிறுவனத்தின் தொழில் நுட்ப வசதிகளும் மின் உற்பத்தித் துறையில் அனைவராலும் அறியப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் இளநிலை இன்ஜினியரிங் பதவியில் எலக்ட்ரிகல் பிரிவில் 486 காலியிடங்களையும், எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேஷன் பிரிவில் 26 காலியிடங்களையும், சிவில் பிரிவில் 4 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இள நிலை இன்ஜினியரிங் பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 18 வயது
நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
உத்தரப் பிரதேச அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், சிவில் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தி மொழியறிவும், டி.ஓ.இ.ஏ.சி.சி., அங்கீகாரம் பெற்ற ஓராண்டு கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பும் கூடுதல் தேவைகளாகும்.
தேர்ச்சி எப்படி
யு.பி.பி.சி.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.800/க்கான டி.டி.,யை "Officer, Elecricity Service Commission, Lucknow" என்ற பெயரில் லக்னோவில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பவேண்டும். டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், பதவியின் கோடு எண், ஆன்லைனில் வழங்கப்படும் கன்ட்ரோல் எண் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
யு.பி.பி.சி.எல்., நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் பிரின்ட் அவுட்டிலும், ஆப்லைனில் விண்ணப்பிப்பவர்கள் டவுண்லோடு செய்து பெறப்பட்ட விண்ணப்பத்தில் உரிய இடத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப் படத்தை ஒட்டி, டி.டி.,சுய உறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட வயதுச் சான்று, மதிப்பெண் சான்று முதலிய சான்றிதழ் நகல்களை இணைத்து பின் வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் 06.04.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
Secretary,
Electricity Service Commission,
UPPCL, B-17, J.Road, Sector - C,
Mahanagar Extension,
Lucknow - 226006.
ஆன்லைனில் பதிய இறுதி நாள் : 23.03.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 06.04.2011
இணைய தள முகவரி: ""www.uppcl.org" இந்தி அறிந்திருப்பவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை தரப்படும் என்பதை அறியவும்.
