UPDATED : மார் 10, 2011 12:00 AM
ADDED : மார் 10, 2011 04:05 PM
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனத்தின் லக்னோ கிளைக்கு அலுவலக உதவியாளர்களை (ஆபிஸ் அசிஸ்டன்ட் ) நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேவை என்ன இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் எம்.எஸ்., ஆபிஸ், டேலி போன்ற கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவை.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் அலுவலகம் அல்லது பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
எச்.ஏ.எல்., நிறுவனத்தின் ஆபிஸ் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ரெஸ்யூமுடன், விண்ணப்பத்தை பின் வரும் முகவரிக்கு 20.03.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Mr. Ashish Saini, DM (HR) - Secretary
(HAL Education Society, Lucknow),
HAL - Accessories Division,
PO : HAL Lcuknow - 226016.
