தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் அன்று நடக்க இருந்த தேர்வுகள் மாற்றம்

தேர்தல் அன்று நடக்க இருந்த தேர்வுகள் மாற்றம்

தேர்தல் அன்று நடக்க இருந்த தேர்வுகள் மாற்றம்


UPDATED : மார் 11, 2011 12:00 AM

ADDED : மார் 11, 2011 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2011 12:00 AM ADDED : மார் 11, 2011 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் ஏப்ரல் 13ல் சட்டசபை தேர்தல் நடப்பதால், அன்று நடக்கவிருந்த 6, 7, 8, 9ம் வகுப்பு தேர்வுகளின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரல் 11ல் துவங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அட்டவணை வழங்கப்பட்டது.


சட்டபை தேர்தலையொட்டி இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 6ல் தமிழ் முதல் தாள், 7ல் இரண்டாம் தாள், 9ல் சுற்றுச்சூழல் கல்வி, 15ல் ஆங்கிலம் முதல்தாள், 18ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 19ல் கணிதம், 20ல் அறிவியல், 21ல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.


இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us