UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 10:07 AM
இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், வீடுகளிலிருந்து தேர்வு மையம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அரசு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியை விட்டு வேறு பள்ளியில் உள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத செல்கின்றனர். பள்ளி நாட்களில், வீட்டில் இருந்து பள்ளி வரை செல்ல மட்டுமே, இலவச பஸ் பாஸ் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
இந்த பாசைப் பயன்படுத்தி, தேர்வு மையங்களுக்குச் செல்ல முடியாது. இதை கவனத்தில் கொண்ட போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், அனைத்து பணிமனைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு இலவசமாக செல்ல அனுமதிக்கலாம். மாணவர்களின் நலன் கருதி, கல்வி ஆண்டு முடியும் வரை, இலவச அனுமதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
