UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 10:41 AM
தினமலர் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம், இன்று மாலை 3 முதல் 6 மணி வரை, மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள 4362 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த போட்டித்தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் முறை, தேர்வுக்கு எப்படி தயாராவது, எந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும் போன்றவை குறித்து ஆலோசனை முகாமில் விளக்கப்படும்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம், பேராசிரியர் ராஜ்மோகன் ஆலோசனை வழங்குகின்றனர்.
குரூப் 2 மட்டுமல்லாமல் அரசு, வங்கிகள் நடத்தும் பிறதேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க விரும்புபவர்களும் முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
