தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ட்ரை-வேலி போன்ற பிரச்சினை மீண்டும் எழாமல் இருக்க

ட்ரை-வேலி போன்ற பிரச்சினை மீண்டும் எழாமல் இருக்க

ட்ரை-வேலி போன்ற பிரச்சினை மீண்டும் எழாமல் இருக்க


UPDATED : மார் 12, 2011 12:00 AM

ADDED : மார் 12, 2011 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2011 12:00 AM ADDED : மார் 12, 2011 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முறையாக, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், சரியான வழியில் அனுமதி பெற வேண்டியது மாணவர்களின் கடமையாகிறது.


இதற்கு வழிகாட்டும் விதத்தில் பல எழுத்தாளர்கள், புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். உதாரணத்திற்கு அக்ரிடிடேஷன் மில்ஸ். இது போன்ற புத்தகங்களில் போலி கல்வி நிலையங்களின் முகம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி நடைமுறை கவுன்சில் அல்லது அமெரிக்காவின் கல்வித் துறை ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, முறையான வழிகளில் மாணவர்கள் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டியாக அது அமைகிறது.


ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் முன், அதன் துவக்கம், பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதைப் பற்றி வந்துள்ள செய்திகளை படியுங்கள். கல்லூரிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசுங்கள், புதிதாக சேர்ந்த அல்லது கடந்த ஆண்டில் இருந்து அங்கு பயிலும் மாணவர்களிடம் நடைமுறைகள் பற்றி விசாரியுங்கள். முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள். பிறகு சேர்க்கை பெறுங்கள் என்கிறது அனுபவசாலிகளின் பதில்.


பொதுவாக போலியான கல்லூரிகளின் விளம்பரங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். போலி கல்லூரிகளுக்கு நல்ல விளம்பரத்துறை கிடைத்துவிடுகிறது. அமெரிக்காவிற்கு புதிதாக வரும் மக்களுக்கு, இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், உண்மை என நம்பும் அளவிற்கு விளம்பரத்தில் காட்டப்படும்.


நல்ல கல்லூரியோ அல்லது பல்கலைக்கழகமோ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குமேத் தவிர, முறையான நுழைவுத் தேர்வுகள் இன்றி மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிக்கவோ, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அனுமதியோ அளிப்பதில்லை.


இணையம் வாயிலாக மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள கல்வி நிர்வாகம் பற்றி தெளிவான முடிவை எடுத்துக் கொள்ளலாம்.


சில கவனிக்க வேண்டிய நடைமுறைகள்


1. சில கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு முறையை பின்பற்றி பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு முறையையே விற்று மாணவர்களை சேர்க்கின்றன.


2. www.chea.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இதில் ஒழுங்கு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் கல்வி நிலையங்களின் பட்டியலும், www.michigan.gov/documents/Non-accreditedSchools_78090_7.pdf இணையத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்வி நிலையங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.


3. அமெரிக்காவில் .இடியு மற்றும் .ஏசி என்ற சுருக்க முறையுடன் காணப்படும் இணைய முகவரிகள் கல்விக்கான இணையதளங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது வெறும் டொமைன் பெயர்தானேத் தவிர வேறு ஒன்றும் இல்லை.


4. கல்லூரி வளாகம் மற்றும் கேம்பஸ் நடைபெறும் இடங்கள் உண்மையிலேயே கல்லூரியின் சொத்துக்களா அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட இடங்களா என்பதை இணையதளத்தின் மூலம் கண்டறிவது மிகவும் அவசியம்.


5. போலியான கல்லூரி நிர்வாகங்களை இணையதளத்தின் மூலம் எளிதாக கண்டறிந்துவிடலாம். போலி பல்கலைக்கழகங்களுக்கு சொந்தமாக கட்டிடங்களோ, நிலையான முகவரியோ இருப்பதில்லை. மிகவும் எளிதாக அவர்கள் தங்கள் முகவரியை மாற்றிக் கொள்கின்றனர்.


6. சில முதன்மையான இணையதளங்களில் http://diplomamillnews.blogspot.com/ உங்களது மின்னஞ்சலை பதிவு செய்து கொள்வதன் மூலமாக, அதில் பதிவு செய்யப்படும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.


7. தரவரிசைப் பட்டியல்களை சோதிப்பதும் நல்லது. யுஎஸ் நியூஸ் மற்றும் வோர்ல்ட் ரிபோர்ட் மற்றும் பிரின்ஸ்டன் ரிவ்யூ போன்ற தரவரிசைப் பட்டியல்களை பார்த்தால் நிச்சயமாக உண்மை நிலையை அறிய முடியும்.


8. அமெரிக்காவின் இடாஹோ, ஹவாய், மோன்டானா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் கல்வித் தரம் குறைந்த மற்றும் போலியான கல்வி நிலையங்கள் உள்ளன.


9. சில மாகாணங்களின் சார்பில், தங்கள் மாகாணத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. உதாரணமாக ஓரிகான் சார்பில் வெளியான பட்டியலை www.osac.state.or.us/oda/unaccredited.aspx இணையதளத்தில் காணலாம்.


10. புகழாரம் பாடும் பல்கலைக்கழகங்கள் அதாவது எந்தவொரு கல்வி நிலையம் தங்களது முன்னாள் டாப் மாணவர்களின் நீண்ட பட்டியலையோ அல்லது புகழையோ அதிகமாக வெளியிடுகிறதோ அது மாணவர்களுக்கு ஒரு விழிப்பை ஏற்படுத்துவதற்கான அலாரமாக இருக்க வேண்டும்.


11. அமெரிக்காவிற்குச் செல்லும் மாணவர்கள், அமெரிக்கா-இந்திய கல்வி ஸ்தாபனத்தின் (யு.எஸ்.ஐ.இ.எப்.) உதவியை நாடலாம். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உதவ யு.எஸ்.ஐ.இ. எப்போதும் தயாராக உள்ளது. (www.usief.org)


இதுபோன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் போலியான கல்வி நிலையங்களை கண்டறிந்து அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us