தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நோயாளிகளை பார்க்க எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு அனுமதி

நோயாளிகளை பார்க்க எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு அனுமதி

நோயாளிகளை பார்க்க எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு அனுமதி


UPDATED : மார் 14, 2011 12:00 AM

ADDED : மார் 14, 2011 04:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2011 12:00 AM ADDED : மார் 14, 2011 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன்படி, இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள், மருத்துவமனையின் நோயாளிகள் பிரிவிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நோயாளிகள் பிரிவிற்குச்  சென்று அவர்களது நோயைப் பற்றி கேட்டறியும் விதத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன், எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்வார்கள். வெறும் வகுப்பறையில் மட்டும் பாடமாகக் கற்கும் மருத்துவத்தை விட, இவ்வாறு நேரடியாக நோயாளிகளுடன் உரையாடி பெறும் அனுபவம் நிச்சயம் மருத்துவ மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று மருத்துவக் கவுன்சில் கருதுகிறது.


ஆனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ, மருந்துகளை பரிந்துரைக்கவோ மருத்துவ மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நோயாளிகளை பார்க்க செல்லும் மருத்துவருக்குத் தேவையான உதவிகளை மாணவர்கள் செய்யலாம். நோயாளிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளலாம். இனி வரும் காலத்தில், வகுப்பறைகளில் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட, இதுபோன்ற நேரடியான பாடங்களே மாணவர்களுக்கு அதிகமாக்கப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us