தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வில் பிரகாசிக்க

ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வில் பிரகாசிக்க

ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வில் பிரகாசிக்க


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 02:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 02:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வுகளையும் சில கல்வி நிலையங்கள் நடத்துகின்றன. இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் வெறும் அப்ஜெக்டிவ் கேள்விகளை மட்டும் கொண்டிருப்பதில்லை. ஆங்கில மொழிப் புலமை, கணித அறிவு, தகுதி, திறமை போன்றவற்றையும் கண்டறியும் வகையில் அமைகிறது.


ஆங்கில மொழிப் புலமை : ஆங்கில மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் ஆங்கிலத்தில் சற்று பலவீனமானவராக இருப்பின், சில கடினமான ஆங்கில வார்த்தைகளின் ஸ்பெல்லிங், ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு போன்றவற்றில் பயிற்சி எடுங்கள். ஆங்கில செய்தி அல்லது கட்டுரைகளை படியுங்கள். நீங்கள் படிப்பது சரியா அல்லது தவறா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதால் நுழைவுத் தேர்விற்கு எளிதாக இருக்கும்.


கட்டுரை எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் தலைப்பு, எளிதாக அதிக வாக்கிய அமைப்புகளை எழுதும் வகையில் இருப்பது நல்லது.


பொது விழிப்புணர்வு மற்றும் நாட்டு நிலவரம் : இதற்கு தினமும் செய்தித்தாள் படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டாம். பொதுவாக தேசியம், உலகம், விளையாட்டு ஆகியவை தொடர்பான கேள்விகளே அதிகமாக கேட்கப்படும். இது மட்டுமல்லாமல் பொது அறிவுக் கேள்விகளும் கேட்கப்படும். இதற்கு, சில வினாடி- வினா பகுதிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.


ரீசனிங் மற்றம் லாஜிகல் டிடக்சன் : சதுரம், முக்கோணம், வட்டம் போன்றவற்றைத் தொடர்புபடுத்தியே இந்த கேள்விகள் அமையும். மிகச் சிக்கலான கேள்விகளை அவ்வப்போது செய்து பார்த்து அதற்கான பதிலை கண்டுபிடித்து பயிற்சி எடுப்பதன் மூலம், இந்த தேர்வினை எளிதாக செய்ய இயலும். கிராப், கணிதக் கேள்விகள், சிக்கலான கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை கண்டறியுங்கள்.


என்ன செய்வது என்று குழம்பாமல், நீங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவிற்கான அனைத்து விஷயங்களையும் செய்து கொண்டே இருங்கள்.


திறன் அறியும் தேர்வு : சில அசாதாரண சூழ்நிலைகளில் நீங்கள் செயல்படும் வேகத்தைக் கணக்கிடும் வகையில் இந்த தேர்வு அமையும். ஒரு கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில் சரியா அல்லது தவறா என்று கணிக்கப்படுவதில்லை. அந்த சமயத்தில் நீங்கள் எவ்வளவு துரிதமாக ஒரு செயலை செய்ய முடிவெடுக்கிறீர்கள் என்பதைத் தான் இந்த தேர்வின் மூலம் கண்டறிவார்கள்.


கணித அறிவு மற்றும் அறிவியல் திறன் : 9 மற்றும் 10ஆம் வகுப்பில் வரும் கணிதப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நேரம், வேகம், தொலைவு அல்லது நேரம், வேலை, வேலை செய்வதன் எண்ணிக்கை போன்றவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பினை மையப்படுத்தியும் கேள்விகள் வரும். 10ஆம் வகுப்பு பாடத்தில் வரும்  இயற்பியல், உயிரியல், வேதியியல் என்பதன் அடிப்படையை தெரிந்து கொள்வது நல்லது. ஊறுகாயில் ஏன் உப்பு அதிகமாக சேர்க்கப்படுகிறது என்பது போன்ற கேள்விகள் கூட இந்த தேர்வில் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு : தற்போதைய நாட்டு நிலவரத்தை மையப்படுத்தியே குழுக் கலந்துரையாடல் அமையும். எனவே தற்போதைய செய்திகளைப் பற்றி விவாதிக்கும் அளவிற்கு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நேர்முகத் தேர்விலும் தற்போதைய நிலவரம் மற்றும் சுய விவரங்கள் பற்றிய கேள்விகளே அதிகமாக கேட்கப்படும். உங்கள் நடை, உடை, பாவனைகளும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்புடையது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது மக்களுக்கு சேவையாற்றும் ஒரு பணியாகும். எனவே, இனிமை, நம்பிக்கை, அமைதி, ஒருங்கிணைப்பு அகியவை நிறைந்தவராக நீங்கள் இருப்பது மிகவும் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us