UPDATED : மார் 15, 2011 12:00 AM
ADDED : மார் 15, 2011 02:23 PM
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்தியாவின் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தியில் மிக முக்கிய நிறுவனமான செய்ல் நிறுவனம் கட்டுமானம், இன்ஜினியரிங், பவர், ரெயில்வே, ஆட்டோமோடிவ், பாதுகாப்புத் துறை போன்ற துறைகளுக்கான ஸ்டீல் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் 392 அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன்களையும், 300 ஆபரேட்டர் கம் டெக்னீசியன்களையும் டிரெய்னி அடிப்படையில் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
செய்ல் நிறுவனத்தின் டெக்னீசியன் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01/02/2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின் எஸ்1 நிலை கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க மெட்ரிகுலேஷன் படிப்பிற்குப் பின் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்3 நிலை ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க மெட்டலர்ஜி, கெமிகல், செராமிக்ஸ், மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
செய்ல் நிறுவனத்தின் டெக்னீசியன் டிரெய்னி பதவிகளுக்கு கோல்கட்டா, புது டில்லி, நாக்பூர், ஐதராபாத் ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
ஸ்டீல் அதாரிட்டியின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 250/க்கான டி.டி.,யை Steel Authority of India Ltd & IISCO Steel Plant என்ற பெயரில் பர்ன்பூரில் (Burnpur) மாற்றத்தக்கதாக ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, கல்வி, வயது, ஜாதிச் சான்றிதழ்களின் நகல்களையும், டி.டி.,யையும், பின்புறம் கையெழுத்திடப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். வேறு எந்த முறையிலும் அனுப்பக் கூடாது. விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் ""Application for the post of Attendant & cum & Technician (Trainee) or Operator & cum & Technician (Trainee) in SAIL & ISP" என்று குறிப்பிடவும்.
முகவரி
Post Box No.10,
Post Office : Palam Road,
Gurgaon - 122015.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 09.04.2011
இணையதள முகவரி: www.sail.co.in
