தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவ வீரர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகள்

ராணுவ வீரர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகள்

ராணுவ வீரர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகள்


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு


எல்லை பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தொலைநிலை திட்டத்தின் மூலம் கல்வி அளிப்பதற்காக, யஷ்வந்த் ராவ் சவான் மகாராஷ்டிர திறந்தநிலை பல்கலைக்கழகம்(ஒய்.சி.எம்.ஓ.யு), பாதுகாப்பு துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.


இதனையடுத்து, முப்படைகளிலும் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த பல்கலை மூலம் படிப்புகள் வழங்கப்படும். இந்த பல்கலைக்கு புதிதாக நாடு முழுவதும் 44 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பல்கலைக்கு மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.


மேலும் போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு சிறப்பு பி.எட். படிப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் அவர்கள் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் தேவைக்கேற்ப சிறப்பு பி.ஏ., பி.காம். மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளும் ஏற்படுத்தப்படும்.


நாட்டிற்கு உயர்ந்த சேவைசெய்யும் ராணுவ வீரர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் பெரும்பாலும் "வாட்ச்மேன்" பணிகளிலேயே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மனதளவில் தங்களின் தகுதியின்மையை நினைத்து பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மனக்குறையைப் போக்கவும், விரும்பும் வேலைகளுக்கு செல்லும் வண்ணம் கல்வித் தகுதியைப் பெறவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது நம் நாட்டில் இருக்கும் கல்விமுறை, மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சென்றடைவதில்லை. அத்தகைய பணியில் இருக்கும் ராணுவத்தினரும் தங்களின் கல்வி திறமையையோ அல்லது வேறுபல தொழில் திறன்களையோ வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. எனவேதான் இந்த சிறந்த மற்றும் உன்னத முயற்சி.


மேலும் ஒய்.சி.எம்.ஓ.யு., தானாக அமர்ந்து படிப்பதற்கென்று மற்றும் தொலைநிலைக் கல்விக்கென்று தனிமுறையில் எழுதப்பட்ட புத்தகங்களை இலவசமாகவே வழங்கி, வீரர்களின் திறனை எளியமுறையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us