தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள்


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும், இந்தியாவெங்கும் 1068 கிளை அலுவலகங்களைக் கொண்டதும், சர்வதேச அளவில் வணிக ரீதியான செயல்பாடுகளைக் கொண்டதுமான இந்தியாவின் பெருமைமிகு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 4 பிரிவுகளில் மொத்தம் 379 நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பிரிவுகள்
நியூ இந்தியா அஷ்யூரன்சில் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆக்சுவரி, அக்கவுண்ட்ஸ், ஜெனரலிஸ்ட் என்ற நான்கு பிரிவுகளில் முறையே 40, 25, 25, 289 காலியிடங்களைச் சேர்த்து மொத்தம் 379 காலியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு
நியூ இந்தியாவில் நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.02.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிர்வாக அதிகாரிப் பதவியின் 4 பிரிவுகளுக்கும் தேவைப்படும் கல்வித் தகுதிகளைத் தனித்தனியாக இங்கே கொடுத்துள்ளோம்: இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு விண்ணப்பிக்க ஐ.டி., அல்லது கம்ப்யூட்டர் பிரிவில் எம்.இ., அல்லது எம்.டெக்., எம்.சி.ஏ., மாஸ்டர்ஸ் இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி, மாஸ்டர்ஸ் இன் கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி., அல்லது கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


இணைய தள முகவரி www.newindia.co.in ஆக்சுவரி பிரிவிற்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஆக்சுவரியல் சொசைட்டி ஆப் இந்தியா நடத்தும் தேர்வில் 5 பேப்பர்களையும் முடித்திருப்பதோடு இந்த அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.


அக்கவுண்ட்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிக்க பி.காம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது எம்.காம்., படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுண்டன்சி, ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


ஜெனரலிஸ்ட் பிரிவிற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும், முது நிலைப் பட்டப்படிப்பினைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும், எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
தேர்ச்சி முறை
இந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு இடம் பெறும். இந்தத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், இங்கிலீஷ் லாங்வேஜ், ஜெனரல் அவேர்னஸ், நியூமரிகல் எபிலிட்டி/டேட்டா இன்டர்பிரடேஷன், தேர்ந்தெடுக்கும் பிரிவைப் பொறுத்து புரொபஷனல் நாலெட்ஜ் ஆகிய பகுதிகள் இருக்கும். இத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் கோவையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இதர மையங்களில் 22.05.2011 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/க்கான டி.டி.,யை "THE NEW INDIA ASSURANCE COMPANY LTD" என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.150/க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது. டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, பதவியின் பிரிவு மற்றும் கோடு எண்ணைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.


ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதாய் இருந்தால் ரூ.700/க்கு டி.டி.,யை எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.200/க்கு மட்டும் டி.டி.,எடுத்தால் போதுமானது. முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.


விண்ணப்பங்களைப் பரிந்துரை
செய்யப்பட்ட படிவ மாதிரியில் நிரப்பி, டி.டி., சுயவிலாசமிட்ட ரூ.50/க்கான ஸ்டாம்ப் ஒட்டிய இரண்டு கவர்கள் ஆகியவற்றை இணைத்து பின் வரும் முகவரிக்கு 28.03.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல் "NIACL & Administrative Officer (indicate the Group Code for which application is made ) and SC/ST/OBC/ECO /SSRCO/PWD/GENERAL " என்று குறிப்பிட வேண்டும்.


முகவரி
Post Bag No.2281,
Chanakyapuri, Post Office,
New Delhi - 110021.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 28, 2011.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us