தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏன் இந்த பாகுபாடு?

ஏன் இந்த பாகுபாடு?

ஏன் இந்த பாகுபாடு?


UPDATED : மார் 16, 2011 12:00 AM

ADDED : மார் 16, 2011 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2011 12:00 AM ADDED : மார் 16, 2011 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நாட்டில் கிராமப்புற பகுதிகளில் பள்ளிகளுக்கு செல்லும் 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளில், அதிகளவிலான மாணவிகள் அரசு பள்ளிகளிலும், அதிகளவிலான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர் என்று (ASER) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது ஆண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவதையே விரும்புகின்றனர். ஏனென்றால் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளில் தான் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்று அவர்கள் நினைக்கின்றனர். இதனால் தான் அதிக செலவானாலும் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.


அதே நேரத்தில் பெண் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஏனென்றால் அதிகளவில் கல்விக்கு செலவழித்தாலும் வருமானம் என்பது ஆண்களுக்கே அதிகளவில் தருகின்றனர் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இவ்வாறான சிந்தனைகள் வருங்கால இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக அமையும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


மேலும் பெற்றோர்களின் இந்த மனநிலை மாறவேண்டும் என்றும், ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே சமமான கல்வியே வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அவர்களது விருப்பம் மட்டுமல்ல, அனைவரது விருப்பமும் இதுவே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us