தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய வனப் பணி(ஐ.எப்.எஸ்) தேர்வு அறிவிப்பு

இந்திய வனப் பணி(ஐ.எப்.எஸ்) தேர்வு அறிவிப்பு

இந்திய வனப் பணி(ஐ.எப்.எஸ்) தேர்வு அறிவிப்பு


UPDATED : மார் 19, 2011 12:00 AM

ADDED : மார் 19, 2011 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2011 12:00 AM ADDED : மார் 19, 2011 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்திய வனப் பணி(ஐ.எப்.எஸ்) தேர்வு வரும் ஜூலை 9 ம் நடக்கிறது. 2011 ம் ஆண்டுக்கான இந்த தேர்வை யு.பி.எஸ்.சி நடத்துகிறது.


இத்தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு - பொது பிரிவினர் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேசமயம் ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு.


கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் ஏதாவது ஒன்றை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும். விவசாய படிப்பில் இளநிலை பட்டமும், வனத்துறையில் பொறியியல் பட்டமும் தகுதி வாய்ந்தவை.


வாய்ப்புகள் - இந்த தேர்வை எழுதும் பொதுப் பிரிவினர் அதிகபட்சமாக 4 முறையும், ஓ.பி.சி. பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் குறிப்பிட்ட வயதுவரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஏப்ரல் 18.


சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஏப்ரல் 25.


இத்தேர்வு முறைகள் பற்றிய விரிவான விவரங்களுக்கு upsc.ac.in என்ற வலைத்தளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us