மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் பாடங்களுக்கு கடைசி தனி பொதுத்தேர்வு
மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் பாடங்களுக்கு கடைசி தனி பொதுத்தேர்வு
UPDATED : மார் 23, 2011 12:00 AM
ADDED : மார் 23, 2011 09:40 AM
அ நிறம் | அளவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஒன்றரை லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். நேற்று மொழிப்பாட தேர்வு நடந்தது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஏப். 11 வரை தேர்வுகள் நடக்கின்றன. மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் கல்வி திட்டங்களுக்கென தனியாக பொதுத்தேர்வு நடப்பது இதுவே கடைசி. வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி திட்டம் அமலுக்கு வருவதையடுத்து, தற்போதுள்ள கல்வி திட்டங்கள் நடப்பு தேர்வுடன் முடிவுக்கு வருகின்றன.
