தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்தித் துறையில் ஆர்முள்ளவர்களுக்கு

செய்தித் துறையில் ஆர்முள்ளவர்களுக்கு

செய்தித் துறையில் ஆர்முள்ளவர்களுக்கு


UPDATED : மார் 25, 2011 12:00 AM

ADDED : மார் 25, 2011 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2011 12:00 AM ADDED : மார் 25, 2011 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதழியல் படிப்பினை வழங்கும் கல்வி நிலையங்கள் தற்போது மாணவர்களை சேர்ப்பதில் பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்கின்றன.


ஒரு சில நிலையங்களில் சாதாரண நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. சிலவற்றில் எழுத்துத் தேர்வு, சிலவற்றில் குழு கலந்துரையாடல் என பல்வேறு வகைகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


தேர்வு முறை எப்படி இருப்பினும், தேர்வுக்கு ஒரே காரணம்தான். நல்ல மாணவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது. சரி அப்படி என்னத் திறமை இருக்க வேண்டும் என்று கல்வி நிலையம் எதிர்பார்க்கிறது.


பொதுவாக ஒரு கல்வி நிலையம், தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களிடம் இரண்டு தகுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். ஒன்று, பொது விஷயங்களைப் பற்றிய அறிவு, இரண்டாவது மொழித் திறமை. செய்தியாளர் என்பவர், ஒரு சம்பவத்தை புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் திறமையும், எளிதாக கூறுவதற்கு மொழித் திறமையும் வேண்டும் என்பதுதான் இதற்கான அடிப்படையாகும்.


ஆனால், தற்போது இதழியல் கல்வி நிலையங்கள் ஒரு உண்மையை உணர்ந்துள்ளன. அதாவது, செய்தியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் தேவை என்பதுதான் அது. தொழில்நுட்ப அறிவு என்பது எழுத்துத் திறமைக்கும், பொருட்களை செயல்படுத்துவதற்கும் உதவும்.


எழுத்துத் தேர்வு
இதழியல் கல்வி நிலையங்கள் எதிர்பார்க்கும் திறமை மாணவர்களிடம் இருக்கிறதா என்பதை அறிய எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, இதழியல் பாடப்பிரிவுல் சேர வேண்டும் என விரும்பும் மாணவர்கள், இந்த தேர்வுகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.


1. பொது விஷயங்கள்
பொதுவாக விஷயங்கள் பற்றி மாணவர்கள் பெற்றுள்ள அறிவை பரிசோதிக்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்டுள்ள கேள்வித்தாளில், இந்திய அரசியலமைப்பு, புவியியல், பொருளாதாரம், தொழில் அமைப்பு, கலை, கலாச்சாரம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மேலும், தற்போதைய உலக, நாட்டு நடப்புகள் குறித்த கேள்விகளும் இருக்கும்.  சில வார்த்தைகளில் பதில் அளிக்கும் வகையிலான கேள்விகளும் கேட்கப்படும்.


2. மொழித் திறன்
இதழியல் கல்வி நிலையங்கள், தாங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் மொழித்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனை அறியவே மொழித்தேர்வை நடத்துகின்றன. சிறிய கட்டுரைகள் எழுதுவது, சில கேள்விகள் மூலம் மாணவர்களின் இலக்கண அறிவையும் அறிய முற்படுவார்கள். ஒரு கட்டுரையைக் கொடுத்து அதில் உள்ள இலக்கணப் பிழைகளைக் கண்டறியும் சோதனையும் உண்டு.


மொழித் தேர்வு என்பது, எந்த மொழியில் இதழியல் பயில விரும்புகிறார்களோ அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என மொழித் தேர்வு மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அல்லது கல்வி நிலையத்தைப் பொறுத்து மாறுபடும்.


3. தொழில்நுட்ப அறிவு
மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை பெற்றிருப்பது தற்போது வளர்ந்து வரும் மீடியாக்களில் பணியாற்ற மிகவும் அவசியமாகிறது. எனவே, இந்த தகுதியையும் இதழியல் கல்வி நிலயைங்கள் தற்போது இணைத்துள்ளன. இந்த பாடப்பிரிவில் சேருவதற்கு, தொழில்நுட்ப அறிவு அதாவது, கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற சா·ப்ட்வேர் துறையில் பணியாற்றும் அறிவு இருப்பது அவசியமாகிறது. அதேப்போல, போட்டோஷாப், போட்டோ எடிட்டிங் போன்றவற்றையும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதில்லாமல், இணையதளத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு இதற்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மாணவர்கள் இணைந்திருந்தால் அது கூடுதல் மதிப்பெண்ணை அளிக்கும். மாணவர்களுக்கு என்று தனியாக ஒரு பிளாக் இருப்பது சேர்க்கைக்கு கூடுதல் மதிப்பெண்ணை அளிக்கும்.


நேர்முகத் தேர்வின் அடிப்படை
மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்வதற்குக் காரணம், அவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை, ஆராய்ந்து அறியும் திறன், சமநிலைத்திறன், பொது விஷயங்களில் உள்ள அறிவு போன்றவற்றை அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். மேலும், மாணவர்கள் விண்ணத்தில் பொழுதுபோக்கு, பிடித்தவதை, ஆர்வம் என குறிப்பிட்ட சிலவற்றைத் தொடர்பு படுத்தியும் கேள்விகள் கேட்கப்படும்.


குழுக் கலந்துரையாடல்
இந்த தேர்வினை ஒரு சில இதழியல் கல்வி நிலையங்கள் மட்டுமே வைக்கின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் சொல்ல வேண்டிய தகவலை சொல்லும் ஆற்றலும், கேள்விகளைக் கேட்கும் ஆற்றலும் உள்ளதா என்பதன் அடிப்படையில் இந்த குழுக் கலந்துரையாடல் தேர்வு நடத்தப்படுகிறது. பெரும்பாலும் தொலைக்காட்சி செய்தியாளர் பாடப்பிரிவிற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us