UPDATED : ஆக 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருவனந்தபுரம்: எழுதப்படிக்க தெரிந்த மக்கள் அதிகம் உள்ள கேரளாவில், முஸ்லிம் மாணவிகள் திருமணத்துக்காக தங்கள் படிப்பை பாதியில் கைவிடுவது தெரியவந்துள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. கேரளாவில், திருமணத்துக்காக கடந்த ஆண்டில் பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவிகள் 2,685 பேர். இவர்களில் 90 சதவீதத்தினர் மலப்புரம் மாவட்டத்து முஸ்லிம் மாணவிகள்.
கட்டணம் செலுத்த முடியாமல் 28 ஆயிரத்து 690 மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். மேலும் 3,600 பேர், தாங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் பள்ளி இல்லாததால், படிப்பை நிறுத்தி உள்ளனர்.
பெற்றோர்கள் வற்புறுத்தலால் 3,180 பேர் படிப்பை கைவிட்டுள்ளனர். தங்களது தம்பி, தங்கைகளை வீட்டிலிருந்து பார்த்துக் கொள்வதற்காக மூவாயிரம் பேர் படிப்பை கைவிட்டுள்ளனர்.

