மாவட்டத்திற்கு ஒரு பாலிடெக்னிக் மத்திய அமைச்சகம் புதிய திட்டம்
மாவட்டத்திற்கு ஒரு பாலிடெக்னிக் மத்திய அமைச்சகம் புதிய திட்டம்
UPDATED : ஆக 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: பாலிடெக்னிக் இல்லாத மாவட்டங்களில், ஒவ்வொரு பாலிடெக்னிக்குகளை நிறுவ மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால், இதுவரை பாலிடெக்னிக் இல்லாத மாவட்டங்களில், தலா ஒரு பாலிடெக்னிக்குகளை நிறுவ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது நாடு முழுவதும் 1,292 பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் 46 சதவீத பாலிடெக்னிக்குகள் தென் மாநிலங்களில் உள்ளன. ஒரிசாவில் மட்டும் புதிதாக 11பாலிடெக்னிக்குகள் நிறுவப்படும்.
மாவட்டத்திற்கு ஒரு பாலிடெக்னிக் என்பது முதலில், மத்திய நிதியுதவியுடன் துவக்கப்படும். பின்னர், 700க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பில் துவக்கப்படும்.
இதுமட்டுமின்றி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெடிக்கல் லேப் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிட்டல் இன்ஜினியரிங் போன்ற மூன்று ஆண்டு கால பாட வகுப்புகளும் பாலிடெக்னிக்குகளில் துவக்கப்படும். இவ்வாறு அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

