தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம். கள்

அரசின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம். கள்

அரசின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம். கள்


UPDATED : ஏப் 06, 2011 12:00 AM

ADDED : ஏப் 06, 2011 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2011 12:00 AM ADDED : ஏப் 06, 2011 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய மனிதவள அமைச்சகத்தால், ஆர்.சி.பார்கவா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது, "தனிநபர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஐ.ஐ.எம் -களுக்கு நன்கொடைகள் வழங்குவதன் மூலம், ஐ.ஐ.எம். நிர்வாக குழுவில் இடம் பெறலாம். அதன் அடிப்படையில் ரூ.20 கோடி நன்கொடை அளித்து, தொழில் நிறுவனங்கள், 5 வருடங்கள் நிர்வாக குழுவில் இடம் பெறலாம் மற்றும் தனிநபர் அல்லது பழைய மாணவர் ரூ.5 கோடி அளித்து நிர்வாக குழுவில் இடம்பெறலாம்" என்றும் பரிந்துரை செய்தது.


ஆனால் இத்தகைய பரிந்துரைகள் ஐ.ஐ.எம் -களை தனியார்மயமாக்கிவிடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பரிந்துரைகள், ஐ.ஐ.எம் -களை தனியார் மயப்படுத்தாது என்று கபில்சிபல் கூறிய 48 மணி நேரத்திற்குள் ஐ.ஐ.எம்-கல்கத்தா, தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த பரிந்துரைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.


மேலும், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், தனியார் கரங்களில் தாங்கள் விழ நேரிடும் என்று ஐ.ஐ.எம் -கள் கருத்து தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us