UPDATED : ஏப் 08, 2011 12:00 AM
ADDED : ஏப் 08, 2011 09:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் இன்று காலை 10 மணியளவில் துவங்கிய வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் நடந்த கருத்தரங்கில், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பணிகள் என்ற தலைப்பில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகடமியை சேர்ந்த ராஜராஜன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பல கல்வி நிலையங்களில் கருத்தரங்குகளையும் மாணவர்கள் பார்த்து தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.
வழிகாட்டி நிகழ்ச்சியை மாணவர்கள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
