தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியலில் 100க்கு 100 எடுப்போம் - 10ம் வகுப்பு மாணவர்கள்

அறிவியலில் 100க்கு 100 எடுப்போம் - 10ம் வகுப்பு மாணவர்கள்

அறிவியலில் 100க்கு 100 எடுப்போம் - 10ம் வகுப்பு மாணவர்கள்


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"வெள்ளிக்கிழமை நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., அறிவியல் பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் கிடைக்கும்" என பல மாணவியர் குஷியுடன் தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 28ம் தேதி முதல் நடக்கிறது. நேற்று மெட்ரிக் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் குடிமையியல் பாடத்துக்கும், மாநிலக் கல்வி மாணவர்களுக்கு அறிவியல் தேர்வும் நடந்தது.


ஈரோடு கலைமகள் பள்ளி மாணவியர் கூறியதாவது: ஹேமலதா: அறிவியல் பாடத்தில் மிகவும் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டது. இவ்வளவு "ஈஸி&'யாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. 100க்கு 100 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் கிடைக்கும். இதுவரை எழுதிய பாடங்களில் அறிவியல் பாடம் போல் ஈஸியான தேர்வு எதுவும் இல்லை.


இந்துமதி: நேற்று எழுதிய பொதுத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அனைத்து பிரிவுகளிலும் நன்கு படித்திருந்ததால், தேர்வை நன்கு எழுதி உள்ளேன். அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் கிடைக்கும். சென்ற ஆண்டுகளில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளே, இம்முறையும் கேட்கப்பட்டது. மிகவும் சிறப்பாக எழுதி உள்ளேன்.


கலைமகள் மெட்ரிக் பள்ளி மாணவியர் கூறியதாவது:


ஹரிணி: மெட்ரிக் வரலாறு பாடத் தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். ஆசிரியர்கள் தொகுத்து கொடுத்த வினாக்களே பெரும்பாலும் பொதுத்தேர்வில் இடம் பெற்றிருந்தன. 95 மதிப்பெண்கள் கிடைக்கும்.


கோகுலப்பிரியா: வரலாறு பாடத்தில் எல்லா பிரிவுகளிலும் விடைகளை எழுதி உள்ளேன். மிகவும் எளிமையாக வினாக்கள் இடம் பெற்றிருந்தன. பள்ளியில் கொடுத்த பயிற்சி பெரும் உதவியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us