தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகுதி நேர பி.இ., பி.டெக்., படிக்க 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ., பி.டெக்., படிக்க 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ., பி.டெக்., படிக்க 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஏப் 11, 2011 12:00 AM

ADDED : ஏப் 11, 2011 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2011 12:00 AM ADDED : ஏப் 11, 2011 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், அரசு தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, அரசு தொழில்நுட்ப மையம் - வேலூர், சேலம், நெல்லை மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - காரைக்குடி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, கோவை தொழில்நுட்ப மையம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் - சென்னை ஆகிய கல்வி நிறுவனங்களில், பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த படிப்புகளில் சேர தகுதியானோர் வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளமா பயின்ற, தமிழகத்தைச் சேர்ந்தோர் மட்டுமே இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும், டிப்ளமா முடித்து பணிக்கு செல்பவராக இருந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து, 90 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை மேற்கண்ட கல்வி நிறுவனங்களின் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் பொது, பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவினருக்கு 300 ரூபாய் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு 150 ரூபாய். விண்ணப்ப கட்டணத்தை, ( The secretary part time B.E.,/ B.tech., admission coimbatore ) என்ற பெயரில், கோவையில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுக்க வேண்டும்.


விண்ணப்பத்தை தபாலில் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான டி.டி.யுடன், சுய முகவரியிட்ட 50 ரூபாய்க்கான அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறையை சம்பந்தப்பட்ட கல்வி மையங்களுக்கு அனுப்பி பெறலாம். இவ்விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள், ( The secretary part time B.E.,/ B.tech., admission coimbatore institute of technology kovai 641014 ) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us