தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பை தவிர்க்கும் மாணவர்களே...

வகுப்பை தவிர்க்கும் மாணவர்களே...

வகுப்பை தவிர்க்கும் மாணவர்களே...


UPDATED : ஏப் 11, 2011 12:00 AM

ADDED : ஏப் 11, 2011 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2011 12:00 AM ADDED : ஏப் 11, 2011 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்போதைய நடைமுறையில் குறிப்பிட்ட அளவு வருகை பதிவு இருந்தால் மட்டுமே, மாணவர்களால் பல்கலைக்கழக தேர்வை எழுத முடியும். வருகை பதிவேடு என்பது வேலைக்கான நேர்முகத் தேர்விலும் மதிப்பிடப்படுகிறது. எனவே மாணவர்களின் கல்லூரி வருகை பதிவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.


தினமும் வகுப்புக்கு தாமதமாக செல்லும் மாணவர்கள், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். ஆசிரியர்கள் பாடத்தை ஆரம்பிக்கும் போது முதலில், சில அடிப்படையான விஷயங்களை கூறிவிட்டு பின் பாடத்துக்கு செல்வர்.


தாமதமாக செல்லும் மாணவர்களுக்கு பிறகு நடத்தும் பாடங்களில் எதுவுமே புரியாது. இதனால் குறிப்பிட்ட மாணவனின் படிப்புத் தரம் வெகுவாக குறையும். இந்த பழக்கம், பிற்காலத்தில் மாணவனின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.


பணிக்கு செல்லும் போது இந்தப் பழக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாணவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு முன்னரே வகுப்புக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வகுப்பை "கட்&' அடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால் மாணவர்கள் தங்கள் கல்லூரி வாழ்கையை மட்டுமல்லாமல், எதிர்காலத்தையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us