தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 ஆண்டுகளில் முழுமை பெறும் நேஷனல் நாலேஜ் நெட்வொர்க்

2 ஆண்டுகளில் முழுமை பெறும் நேஷனல் நாலேஜ் நெட்வொர்க்

2 ஆண்டுகளில் முழுமை பெறும் நேஷனல் நாலேஜ் நெட்வொர்க்


UPDATED : ஏப் 12, 2011 12:00 AM

ADDED : ஏப் 12, 2011 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2011 12:00 AM ADDED : ஏப் 12, 2011 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தேசிய அறிவு பிணையம்(என்.கே.என்) இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையாக செயல்படத் துவங்கும் என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர். சிதம்பரம் கூறியுள்ளார்.


ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், "நேஷனல் நாலேஜ் நெட்வொர்க் எனப்படும் தேசிய அறிவுப் பிணையம்(என்.கே.என்), தேசிய இன்பர்மேடிக்ஸ் மையத்தால் அமைக்கப்படும். தற்போது 500 முதன்மை நிறுவனங்கள் என்.கே.என். அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது பெரியளவில் நம்பத்தகுந்த நிறுவனமாக இருப்பதுடன், அனைத்து அறிவுசார் நிறுவனங்களும் என்.கே.என். அமைப்பின் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார்.


இந்த என்.கே.என். தொழில்நுட்பம் வகுப்பறை மேம்பாட்டிற்காக பயன்படும் ஒரு முக்கிய அம்சம். மேலும் தற்போது இது டெலிமெடிசின் துறையிலும் பயன்படுகிறது. உலகளவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களில் இந்தியா இணைந்து செயல்பட விரும்புகிறது. இதற்கு என்.கே.என். அமைப்பு உதவியாக இருக்கிறது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us