UPDATED : ஏப் 12, 2011 12:00 AM
ADDED : ஏப் 12, 2011 02:28 PM
"பிஷ்ஷரி சயின்ஸ்' பல்வேறு உட்பிரிவுகளை கொண்டது. இதில் "ஓசனோகிராபி', "எக்காலஜி', உயிரியியல் போன்றவை அடங்கும். மீனவளத்தை பெருக்க "பிஷ்ஷரி சயின்ஸ்' படித்தவர்களின் ஆலோசனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது.
அழிந்து வரும் கடல் வாழ் உயரினங்களை காப்பதிலும் இத்துறை வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். இவர்கள் "அக்குவா கல்சரிஸ்ட்', "பார்ம் மேனேஜர்', ஏற்றுமதியாளர், வர்த்தக மேலாளர் போன்ற பதவிகளை வகிக்க முடியும். நவீன மீன்பிடி தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்துள்ளது இவர்களின் கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
கல்வி தகுதி
பிளஸ்2 வில் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்திருப்பது அடிப்படை கல்வி தகுதியாக கருதப்படுகிறது. "பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் பிஷ்ஷரி' (பி.எஸ்.சி., பிஷ்ஷரி), பேச்சுலர் ஆப் பிஷரி சயின்ஸ் (பி.எப்.எஸ்சி., ) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலை "பிஷ்ஷரி சயின்ஸ்' படிப்புகளும் உள்ளன. இதுதவிர டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளாக இந்தியாவிலேயே "பிஷ்ஷரி சயின்ஸ்' படிப்பை படிக்கலாம்.
வேலைவாய்ப்பு
உலகின் பெரும்பாலான பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்சார் ஆராய்ச்சிகள் அதிகளவில் தற்போது நடைபெற்று வருவதால் அதனைச் சார்ந்த "பிஷ்ஷரி சயின்ஸ்' படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷ்ஷரீஸ் எஜூகேசன், மும்பை
* காலேஜ் ஆப் பிஷ்ஷரிஸ், பெர்காம்பூர்
* காலேஜ் ஆப் பிஷ்ஷரிஸ், எர்ணாகுளம்
* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷ்ஷரிஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோல்கட்டா
* ஆந்திரா பல்கலைக்கழகம், விஷாகப்பட்டினம்
* காலேஜ் ஆப் பிஷ்ஷரிஸ் சயின்ஸ், குஜராத்
* காலேஜ் ஆப் பிஷ்ஷரிஸ், பீகார்
