தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு வருட மேலாண்மை படிப்பை தொடங்கியது ஐ.ஐ.எம்-அகமதாபாத்

ஒரு வருட மேலாண்மை படிப்பை தொடங்கியது ஐ.ஐ.எம்-அகமதாபாத்

ஒரு வருட மேலாண்மை படிப்பை தொடங்கியது ஐ.ஐ.எம்-அகமதாபாத்


UPDATED : ஏப் 13, 2011 12:00 AM

ADDED : ஏப் 13, 2011 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2011 12:00 AM ADDED : ஏப் 13, 2011 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பணி புரிபவர்களுக்கான ஒரு வருட மேலாண்மை முதுநிலை படிப்பை ஐ.ஐ.எம்-அகமதாபாத் துவங்கியுள்ளது.


விரிவான தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 102 மாணவர்களுடன் இப்படிப்பு துவங்கியுள்ளது. இப்பதிப்பின் துவக்க விழா நிகழ்ச்சியில், மாணவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின்போது, மாணவர்களுக்கு, இந்த படிப்பை பற்றிய விளக்கமும், வேறு பல படிப்புகளைப் பற்றிய விளக்கமும் தரப்பட்டது. இந்த படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், சராசரி ஜிமேட் மதிப்பெண்கள் 714, சராசரி வயது 34, சராசரி பணி அனுபவம் 10 வருடங்கள் மற்றும் சர்வதேச பணி அனுபவம் 4.5 வருடங்கள் போன்ற பலவித தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நிதி சேவைகள், டெலிகாம், ஐ.டி, தயாரிப்பு, ஹெல்த்கேர் மற்றும் பொதுத்துறை போன்ற பல துறைகளில் பணி அனுபவம் பெற்றவர்கள், இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பானது, பைனான்சியல் டைம்ஸ் குளோபல் எம்.பி.ஏ. தரவரிசை பட்டியலில் 11 வது இடத்தை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us