UPDATED : ஏப் 16, 2011 12:00 AM
ADDED : ஏப் 16, 2011 11:01 AM
டொராண்டோ: காந்தியவாதி அன்ன ஹசாரே, ஊழலை ஒழிக்க, லோக்பால் மசோதாவிற்காக உண்ணாவிரதம் இருந்ததை ஆதரித்து, கனடாவிலுள்ள ஐ.ஐ.டி. பழைய மாணவர் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை கடைபிடித்தனர். இதற்காக அவர்கள் பொது இடத்தில் கூடவில்லை. மொத்தம் 56 ஐ.ஐ.டி. பழைய மாணவர்கள், அவர்களின் கணவர் மற்றும் மனைவியர் மற்றும் நண்பர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்ன ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால் என்ற ஐ.ஐ.டி. பழைய மாணவர், தகவல் உரிமை சட்டத்தை(ஆர்.டி.ஐ) கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர். கனடாவிலுள்ள ஐ.ஐ.டி. பழைய மாணவர் சங்கத்தினர், அன்ன ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தாங்கள் கையெழுத்திட்ட ஒரு குறிப்பாணையை(மெமோரண்டம்) அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளனர்.
