UPDATED : ஏப் 16, 2011 12:00 AM
ADDED : ஏப் 16, 2011 11:02 AM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகம், 10 புதிய படிப்புகளை இணையதளத்தில் இலவசமாக தொடங்கியுள்ளது.
இந்த இலவச படிப்புகள் இந்தியாவிலுள்ள பலரை கவர்கின்றன. இந்தியா மட்டுமின்றி, சீனா, பிரிட்டன், கனடா, தென்கொரியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாட்டவர்களையும் கவர்கின்றன.
இந்த படிப்புகள், பைனான்சியல் தியரி, சூழல் அரசியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியது. இந்த ஓபன் யேல் படிப்புகள் www.oyc.yale.edu என்ற வலைதளத்தில் கிடைக்கலாம். இந்த படிப்புகள் வீடியோ மற்றும் ஆடியோ வடிவங்களில் வழங்கப்பட்டு, ஒரு முழு வகுப்பறை அனுபவத்தை கொடுக்கின்றன.
