தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்கள்

நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்கள்

நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்கள்


UPDATED : ஏப் 16, 2011 12:00 AM

ADDED : ஏப் 16, 2011 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2011 12:00 AM ADDED : ஏப் 16, 2011 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு இனிய கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது அவசியம். இதற்கு நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் சாதிக்க வேண்டும். அதனால் பள்ளித் தேர்வுகள் முடிந்தவுடன், சிறிய ஓய்வு எடுத்து விட்டு பின் நுழைவுத் தேர்வுக்கு தயாராவது முக்கியம்.



தமிழகத்தில் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள் இல்லாவிட்டாலும், இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதில் குறிப்பாக ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., ஏ.ஐ.இ.இ.இ., சி.இ.டி., யு.ஜி.இ.டி., ஆகிய தேர்வுகள் முக்கியமானவை. ஒவ்வொரு மாணவரும் ஐ.ஐ.டி., அல்லது ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் சேருவதை லட்சியமாக கொள்வது பலனை தரும்.



கடினமாக உழைத்து, தேர்வுக்கு தயாராக வேண்டும். இதற்கான சிறந்த பயிற்சி மையங்களையும் மாணவர்கள் கண்டறிவது அவசியம். மாணவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், மாதிரி வினாக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். தாங்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனம் குறித்து மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்வது அவசியம்.



சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து விட்டு, படிப்புடன் சேர்ந்து கல்லூரி வாழ்க்கையையும் மாணவர்கள் அனுபவிக்கலாம். இதற்காக சரியான முடி வெடிக்க வேண்டிய தருணம் இதுதான். தற்போது சிறிது கடின உழைப்பு தேவை. இதை சரியாக செய்தால் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us