தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வீழ்ச்சியை நோக்கி பி.பி.ஓ. துறை

வீழ்ச்சியை நோக்கி பி.பி.ஓ. துறை

வீழ்ச்சியை நோக்கி பி.பி.ஓ. துறை


UPDATED : ஏப் 17, 2011 12:00 AM

ADDED : ஏப் 17, 2011 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2011 12:00 AM ADDED : ஏப் 17, 2011 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திறன் பற்றாக்குறை, பணியிலிருந்து விலகுதல் போன்ற காரணங்களால் இந்திய பி.பி.ஓ(பிசினஸ் புராசசிங் அவுட்சோர்சிங்) துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


மெக்சிகோ, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சைனா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பி.பி.ஓ. துறையில் இந்தியாவிற்கு பெரும் போட்டியாளர்களாக இருக்கின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. திறன் மிகுந்த மற்றும் படித்த பணியாளர்கள் இந்தியாவில் குறைவாகவே கிடைக்கின்றனர். மேலும் நடுத்தர மற்றும் சீனியர் நிலையிலான அதிகாரிகள் பணியை விட்டு விலகுவது 55 சதவீதம் அதிகரித்துள்ளது.


ஆரம்பம் முதற்கொண்டே, பி.பி.ஓ. துறையானது இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று, ஏராளமான வேலைவாய்ப்பை அளித்து, அதிக வருமானம் தரும் துறையாக இருந்தாலும், அதிக பணி விலகலும், திறன் குறைவும் ஆரம்பம் முதலே அத்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.


பி.பி.ஓ. துறைக்கான ஒரு சிறந்த இடமாக அறியப்பட்ட இந்தியாவில், கடந்த 2 வருடங்களில் பி.பி.ஓ-ஐ.டி. துறையில் 65 சதவீதம் பணி விலகல் நடந்துள்ளது. பார்மா, பேங்கிங், பைனான்சியல் சர்விஸ் மற்றும் இன்சூரன்ஸ் பிரிவுகளை சார்ந்த ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறைகளில் 60 சதவீதம் அளவிற்கு பணி விலகல் நடந்துள்ளன. மேலும் சில்லறை வணிகம் மற்றும் ஐ.டி. பிரிவில் 55 சதவீதம் பணி விலகல் நடந்துள்ளது. மேலும் ஆட்டோ, எப்.எம்.சி.ஜி., உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளில் 45 முதல் 50 சதவீதம் அளவிற்கு பணி விலகல் நடத்துள்ளது. ஆற்றல் பிரிவில் 45 சதவீதம் பணி விலகல் நடந்துள்ளது.


பி.பி.ஓ. துறையில் இதுபோன்ற அதிகளவிலான பணி விலகல் நடப்பது, இந்தியாவில் அத்துறையின் வளர்ச்சியை பெரியளவில் பாதித்துள்ளது. மேலும் தனி நபர்களின் வேலை திறனை மேம்படுத்துவதில் நிறுவனங்கள் பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us