UPDATED : ஏப் 20, 2011 12:00 AM
ADDED : ஏப் 20, 2011 11:05 AM
ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியைத் துவக்க அமிட்டி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஷர்மா கூறியுள்ளார்.
மருத்துவ கல்லூரி மட்டுமல்லாமல் நர்சிங், பாரா மெடிக்கல், ஆர்க்கிடெக்சர், லா, ஹாஸ்பிட்டாலிட்டி, பாரின் லேங்குவேஜ், பேஷன் டெக்னாலஜி, பைன்ஆர்ட், மற்றும் பல எண்ணற்ற பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன என்றார்.
கடந்த 1999ல் நாற்பது மாணவர்களை கொண்டு துவங்கிய அமிட்டி மேலாண்மை கல்வி நிறுவனம் தற்போது 110 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 மாணவர்களைக் கொண்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. அறிவியல், தொழிநுட்பம், வணிகம், இதழியல், தொலை தொடர்பு என எண்ணற்ற துறைகளில் இளநிலை, முதுநிலை, பி.எச்டி. என பட்டப்படிப்புகளை வழங்குகிறது என்று இக்னீஷியன் - 2011 துவக்க விழாவில் டாக்டர் ஷர்மா பேசினார்.
அமிட்டி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் பயோ-டெக்னாலஜி ஆப் தி யூனிவேர்சிட்டி ஆகியவை இணைந்து இக்னீஷியன் - 2011 என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தின.
இவ்விழாவை துணை வேந்தர் டாக்டர் ஷர்மா துவக்கி வைத்தார். மொத்தம் 150 கல்வி நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்றன. தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்விழா நடத்தப்பட்டது.
