தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/20 ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கம் பெறும் மாணவர்

20 ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கம் பெறும் மாணவர்

20 ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கம் பெறும் மாணவர்


UPDATED : ஏப் 23, 2011 12:00 AM

ADDED : ஏப் 23, 2011 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2011 12:00 AM ADDED : ஏப் 23, 2011 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1992ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முதன்மை மாணவராக முடித்தவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ரபீந்தர்ஜித் சிங் பிரேர், சண்டிகரின் முதன்மையான பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சிவில் பொறியியல் படித்தவர். இவர் 8000க்கு, 6,497 மதிப்பெண்கள் எடுத்து முதன்மையான மாணவராக தேர்ச்சி பெற்றார். இவர் தங்கப் பதக்கம் பெறும் மாணவர் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.


ஆனால், பட்டமளிப்பின் போது, எந்த ஒரு மாணவர், முதல் முயற்சியிலேயே எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி அடைகிறாரோ அவருக்குத்தான் தங்கப் பதக்கம் என்ற விதிமுறையின் அடிப்படையில் பிரேருக்கு தங்கப் பதக்கம் அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது.


ஏனெனில், பிரேர், கடுமையான உடல்நிலை பாதிப்பினால், 1990ல் நடந்த 4வது செமஸ்டர் தேர்வில் ஒன்றை எழுதத் தவறி, 1991ஆம் ஆண்டு நடந்தத் தேர்வின் போது தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.


இதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு பிரேர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். வழக்கு விசாரணையில் பிரேருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், பல்கலையின் விதிமுறைப்படி, பிரேர் எல்லா தேர்வுகளையும் முதல் முறை எழுதியே தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் எழுதத் தவறிய தேர்வை அடுத்த முறை எழுதியுள்ளார். ஆனால் அது அவருடைய முதல் முயற்சி. பல்கலை குறிப்பிட்டபடி, முதல் முயற்சி என்பது, மாணவர் தேர்வு எழுதியதை மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே பிரேருக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு வாதாடினார்.


இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்ற நீதிபதிகள், பிரேருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கி கெளரவிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us