தண்டையார்பேட்டை மருத்துவமனையில் பட்டயப்படிப்பு அறிமுகம்
தண்டையார்பேட்டை மருத்துவமனையில் பட்டயப்படிப்பு அறிமுகம்
UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 11:51 AM
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகள் மற்றும் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டயப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு (டி.எம்.எல்.டி.) மற்றும் செவிலியர் உதவியாளர் பயிற்சிகள் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.
மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு
இந்த படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை எடுத்து படித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 17 முதல் 30 வயது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 17 முதல் 35 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடப்பிரிவு : பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பயிற்சிக்கான மாதக் கல்விக் கட்டணம் ரூ.300.
செவிலியர் உதவியாளர் படிப்பு
இந்தப் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். பயிற்சி தமிழில் வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கான மாதக் கட்ணம் ரூ.75 ஆகும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
தொற்றுநோய் மருத்துவமனை
187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
தண்டையார்பேட்டை சென்னை-81.
