தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்


UPDATED : ஏப் 29, 2011 12:00 AM

ADDED : ஏப் 29, 2011 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2011 12:00 AM ADDED : ஏப் 29, 2011 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், விருப்பமுள்ள ஆசிரியர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்படும் முன், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தி, விருப்பப்படும் இடங்கள் ஒதுக்கப்படும். இதன்படி, வரும் கல்வியாண்டிற்கு முன் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அதை, தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு சுற்றுக்கு விட்டு ஒப்புதல் பெற வேண்டும்.


கவுன்சிலிங் விண்ணப்பத்தின் நகலை அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் உடனே அனுப்ப வேண்டும். மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வரும் 10ம் தேதிக்குள் மூன்று பிரதிகளில் பெற்று, தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு மே 12ம் தேதிக்குள், வருவாய் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும்.


ஒரே மாவட்ட மாறுதலுக்கு ஒரு பிரதியிலும், வேறு மாவட்ட மாறுதலுக்கு இரண்டு பிரதிகளிலும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெற்ற ஐந்து நாட்களில் தகுதியுள்ள, தகுதியில்லா, நிராகரிப்பு விண்ணப்பங்கள் என பிரித்து ஏ, பி, என வகைப்படுத்தி பதிவேடு தயார் செய்து, முதன்மை கல்வி அலுவலர் ஒப்பம் பெற்று பராமரிக்கப்படும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவை, தற்காலிக பணி நீக்கம், நீண்ட கால விடுப்பு, நிர்வாக நலனுக்கான மாற்றம் போன்றவை இருந்தால், அதன் விவரங்களை விவரமாக தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us