UPDATED : மே 02, 2011 12:00 AM
ADDED : மே 02, 2011 11:11 AM
அ நிறம் | அளவு
பிளஸ் 1 தேர்வில் 3 பாடங்களுக்குள் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் முதல்வாரத்தில் தேர்வு நடக்கிறது.
முதன்மை கல்வி அதிகாரி அசோகன் கூறுகையில்,"இன்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படுகிறது. மூன்று பாடங்களுக்குள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் முதல்வாரத்தில் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர். 4 பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் தொடர வேண்டும், இவ்வாறு அசோகன் கூறினார்.
