தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைந்த விலையில் எலக்ட்ரானிக் வீல்சேர் : மாணவர்கள் சாதனை

குறைந்த விலையில் எலக்ட்ரானிக் வீல்சேர் : மாணவர்கள் சாதனை

குறைந்த விலையில் எலக்ட்ரானிக் வீல்சேர் : மாணவர்கள் சாதனை


UPDATED : மே 03, 2011 12:00 AM

ADDED : மே 03, 2011 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2011 12:00 AM ADDED : மே 03, 2011 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள், மாற்று திறனாளிகளுக்கான எலக்ட்ரானிக் வீல் சேர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை கருவிகள், கட்டுப்பாட்டு துறை இறுதியாண்டு மாணவர்களான தீபன், கார்த்திக்கேயன், விவேகானந்த் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தினர்.


இவர்கள் கூறியதாவது: மாற்றுதிறனாளிகளும், வயதானவர்களும் பயன்படுத்தப்படும் தானியங்கி சக்கர நாற்காலிகள் 50 ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரையில் உள்ளது. இதை விட குறைந்த விலையில் நாங்கள் உருவாக்கிய எலக்ட்ரானிக் வீல் சேரில் டியூப்லெஸ் டயர், சீட்பெல்ட், சிக்னல் லைட், போன்றவைகளுடன் சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய 12 வோல்ட் பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 மணி நேரம் வீல்சேரை இயக்க முடியும்.


பவர் குறைவதை காட்டுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், அலாரம் வடிவமைத்துள்ளோம். வீல்சேரில் அமர்ந்தபடியே 360 டிகிரி கோணத்தில் திரும்பலாம். இதை இயக்குவதற்கான சுவிட்ச் கைப்பிடியில் உள்ளது. இதன் மூலம் சாய்வு தளங்களில் இலகுவாக ஏற முடியும். இறங்குவதற்கு வசதியாக எலக்ட்ரானிக் பிரேக் உள்ளது. மேலும் அதிகபட்சம் 15 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று மாதங்கள் ஆனது. உற்பத்தி செலவு 8 ஆயிரம் ரூபாய் ஆனது. விரைவில் காப்புரிமை பெற உள்ளோம், என்றனர்.


இவர்களையும், வழிகாட்டியாக இருந்த துறை தலைவர் வளர்மதி, பள்ளிகொண்ட ராஜசேகரன், ரமேஷ் ஆகியோரை பல்கலை வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us