UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:16 AM

காஞ்சிபுரம்:
கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் 25வது ஆண்டு விழா, தமிழிசை விழா என்ற பெயரில், கலை பண்பாட்டு மைய வளாகத்தில் நடந்தது.
இதில், கோலேரி வினோத்குமார் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சியும், மதுரை ஸங்கீதா முத்ரா சிவகணேஷ் வாய்பாட்டும், சங்கரஹா கல்சுரல் டிரஸ்டின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கு தலைமை வகித்த காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன், மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட அரசு இசைப் பள்ளி முன்னாள் ஆசிரியர் உத்திரகுமாரன், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் தெய்வசிகாமணி வாழ்த்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் ரமணி வரவேற்றார். பரதநாட்டிய ஆசிரியை உஷா ஆண்டறிக்கை வாசித்தார்.