மாநில அளவிலான ஓவிய போட்டி காஞ்சி மாணவிக்கு மூன்றாம் பரிசு
மாநில அளவிலான ஓவிய போட்டி காஞ்சி மாணவிக்கு மூன்றாம் பரிசு
UPDATED : நவ 23, 2026 09:13 PM
ADDED : நவ 23, 2026 09:14 PM
காஞ்சிபுரம்:
சென்னையில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில், காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி திவ்யா, 19, மூன்றாம் பரிசு வென்றுள்ளார்.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை சார்பில், மாநில அளவிலான ஓவிய போட்டி சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இப்போட்டியில் பங்கேற்ற, காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு உயிர் வேதியியல் பயிலும் மாணவி எம்.திவ்யா, 19, மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டினார்.
மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்ற மாணவி எம். திவ்யாவை, கல்லுாரி நிர்வாகத்தினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
