UPDATED : டிச 18, 2025 11:00 PM
ADDED : டிச 18, 2025 11:01 PM
பெலகாவி:
''கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., மற்றும் பிற பாட திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்களில், கன்னடம் கற்பது கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
மேல்சபையில் பா.ஜ.,வின் ரவிகுமார் கேள்விக்கு, அவர் அளித்த பதில்:
கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., மற்றும் பிற பாட திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்களில், கன்னட மொழி கற்பது கட்டாயம். பல கல்லுாரிகள் செயல்படுத்தவில்லை. அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் மீறி உள்ளன. விளக்கம் கேட்டு, கல்வி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இப்பள்ளிகளுக்கு மாநில அரசே நிதி செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

