தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தர வரிசை பட்டியலில் காரைக்குடி பல்கலை

தர வரிசை பட்டியலில் காரைக்குடி பல்கலை

தர வரிசை பட்டியலில் காரைக்குடி பல்கலை


UPDATED : மே 15, 2024 12:00 AM

ADDED : மே 15, 2024 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2024 12:00 AM ADDED : மே 15, 2024 10:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி:
டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய பல்கலை., தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை 251 முதல்- 300 வது இடத்தை பெற்றுள்ளது.

2023ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆயிரத்து 127க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டது. இதில், அழகப்பா பல்கலை 251-முதல் 300 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் 32 வது இடத்தையும் தமிழக அளவில் 6வது இடத்தையும் பல்கலை அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் குழுவினர் தரவுகளை சேகரித்து சமர்ப்பித்தனர். தரவரிசையில் அழகப்பா பல்கலையை இடம் பெற செய்த பேராசிரியர்கள் அலுவலர்கள் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் க. ரவி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us