sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மத சர்ச்சையாக மாறிய காஷ்மீர் மருத்துவ கல்லுாரி அட்மிஷன்

/

மத சர்ச்சையாக மாறிய காஷ்மீர் மருத்துவ கல்லுாரி அட்மிஷன்

மத சர்ச்சையாக மாறிய காஷ்மீர் மருத்துவ கல்லுாரி அட்மிஷன்

மத சர்ச்சையாக மாறிய காஷ்மீர் மருத்துவ கல்லுாரி அட்மிஷன்


UPDATED : டிச 01, 2025 08:03 PM

ADDED : டிச 01, 2025 08:03 PM

Google News

UPDATED : டிச 01, 2025 08:03 PM ADDED : டிச 01, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு -காஷ்மீர்:
ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரியில் முஸ்லிம்களுக்கு அதிக இடம் ஒதுக்கியதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், சர்ச்சை வெடித்துள்ளது. மாணவர் சேர்க்கையை ரத்து செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என ஹிந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் ரியாசியி ல் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரியை, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் நடத்தி வருகிறது.

எதிர்ப்பு



முதல் முறையாக இந்த ஆண்டு முதல் இந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இந்தக் கல்லுாரிக்கு, 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், 42 இடங்கள், முஸ்லிம் மாணவர்களுக்கும், 7 இடங்கள் ஹிந்துக்களுக்கும், ஒரு இடம் சீக்கிய மாணவருக்கும் கிடைத்துள்ளது.

இந்த ஒதுக்கீடுகள் தான் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹிந்து அமைப்புகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதிலும், டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, முஸ்லிம் டாக்டர்களே காரணம் என்ற நிலையில், இந்த ஒதுக்கீடு, ஹிந்து அமைப்புகள் மத்தியில் ஆவே சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம், மாணவர் சேர்க்கை, முழுக்க முழுக்க நீட் தேர்வு அடிப்படையில் நடந்துள்ளது. தவிர, இந்த மருத்துவக் கல்லுாரிக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கைக்கு மத ரீதியிலான இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹிந்துக்கள் வழிபடும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரியில் அதிக அளவில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு, அங்குள்ள 60 ஹிந்து அமைப்புகளின் கூட்டமைப்பான வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விமர்சனம்


அதன் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற கர்னல் சுக்பீர் சிங் மன்கோட்டியா, 2025 - 26ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் தேர்வு பட்டியலை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பா.ஜ.,வும் அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுனில் ஷர்மா தலைமையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

சுனில் ஷர்மாவும், கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் ஒன்றிணைந்து, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளனர்.

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் மன்கோட்டியா முன்வைத்துள்ளார்.

''மாணவர் சேர்க்கை விவகாரத்தில் முறைகேடு நடந்து இருக்கிறது. அதன் காரணமாகவே சேர்க்கை நடைமுறைகள் மிக ரகசியமாக நடந்துள்ளன. ஹிந்து பக்தர்களின் நன்கொடைகள் வாயிலாக கட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லுாரியில், முஸ்லிம் மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கி இருக்கக் கூடாது.

''இந்நடவடிக்கை மூலம் ஹிந்துக்களின் உணர்வுகளை கோவில் நிர்வாகம் புண்படுத்தி விட்டது,'' என, மன்கோட்டியா விமர்சித்துள்ளார்.

பூதாகரம்



ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடமும் இந்த விவகாரம் தொடர்பாக ஹிந்து அமைப்புகள் முறையிட்டுள்ளன.

பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், யுவ ராஜ்புத் சபா போன்ற வலதுசாரி அமைப்புகளும் இந்த மாணவர் சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஹிந்துக்களின் நன்கொடை மூலம் கட்டப்பட்ட இந்த கல்லுாரியில் ஹிந்து மாணவர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என, அந்த அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.

அதே சமயம், ''நீட் தேர்வு வாயிலாகவே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. ஹிந்து கோவிலுக்கு தொடர்புடைய அந்த கல்லுாரியில் பயில்வதற்கு, அந்த மாணவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

''தற்போது மத ரீதியாக மாணவர் சேர்க்கை விவகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது,'' என, தேசிய மாநாட்டு கட்சித் தலைவரான, மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், ஜம்மு - காஷ்மீரில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம், தற்போது பூதாகரமாகி, மத சர்ச்சையாக மாறியுள்ளது.






      Dinamalar
      Follow us