முதலாமாண்டு மாணவர்களுக்கு கதிர் கல்லுாரியில் வரவேற்பு
முதலாமாண்டு மாணவர்களுக்கு கதிர் கல்லுாரியில் வரவேற்பு
UPDATED : ஜூலை 06, 2026 04:39 PM
ADDED : ஜூலை 06, 2026 04:41 PM

கோவை:
நீலாம்பூரில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாநில வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க கனவு காண்கின்றனர். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி கனவு கண்டதால், விஜய் முதல்வராகியுள்ளார். இந்தியாவுக்கே வழிகாட்டியாக, தமிழகம் மாறும். ஒரு மனிதன் உயர, கல்வி ஒன்றால் மட்டுமே முடியும். கனவுகளை நிறைவேற்றவும், நாடு வளம் பெறவும் கல்வி உதவும்,” என்றார்.
கதிர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் லாவண்யா முன்னிலை வகித்தார். முதல்வர் கற்பகம் வரவேற்றார். அமைச்சர்கள் விக்னேஷ், சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் சுகுமார், சுனில் ஆனந்த், கிரி பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி துணைத்தலைவர் மிதிலேஷ் நன்றி தெரிவித்தார்.
