UPDATED : ஜூலை 06, 2026 04:41 PM
ADDED : ஜூலை 06, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
அரூர்:
அரூர், சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் சின்னாங்குப்பத்திலுள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
சீனியர் பிரிவில், சிலம்பம் ஒற்றை கம்பு சுற்றும் போட்டியில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் சுமன் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவன் சுமன் மற்றும் அவனுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, கலைமன்னன், முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் காசிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
