தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தகுதி தேர்வு : 1395 பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதி தேர்வு : 1395 பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதி தேர்வு : 1395 பேர் பங்கேற்பு


UPDATED : ஜூலை 06, 2026 04:43 PM

ADDED : ஜூலை 06, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 04:43 PM ADDED : ஜூலை 06, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
நீலகிரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில், 1395 பேர் பங்கேற்றனர்.

ஊட்டியில் ஜோசப் பள்ளி, ஹில்டாஸ், பெத்லகேம், சாந்தி விஜய், குன்னூர் ஆண்டனி ஆகிய பள்ளிகளில் நடந்தது. இந்த தேர்வு எழுத 1475 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

1395 பேர் பங்கேற்பு


அதிகாலை முதலே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, தேர்வு அறைகளுக்குள் நுழைந்தனர். தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 09:30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். 09:30 மணிக்குப் பிறகு வந்த ஒரு சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை,10:00 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல், 1:00 மணி வரை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.

தேர்வின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வு மையங்களுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பெல்ட், ஷூ மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து தேர்வு அறைக்குள் நுழையவும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊட்டி சாந்தி விஜய் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நேற்று நடந்த தேர்வில் 80 பேர் வரவில்லை. 1395 பேர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us