கேரளாவில் மே 8ல் 10ம் வகுப்பு; மே 9ல் பிளஸ் -2 ரிசல்ட்
கேரளாவில் மே 8ல் 10ம் வகுப்பு; மே 9ல் பிளஸ் -2 ரிசல்ட்
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 07:44 AM
மூணாறு:
கேரளாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 8ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படும்.' என, கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
கேரளாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 4,27,105 பேரும், பிளஸ்- 2 தேர்வு எழுதிய 4,41,120 பேரும் முடிவுக்கு காத்திருக்கின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு மே 8ல், பிளஸ் -2 தேர்வு முடிவு மே 9ல் வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
அதேபோல் தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளி அளவில் 29,300 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதன் முடிவுகளும் மே 9ல் வெளியிடப்படுகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால், அதற்கு ஏற்ப பிளஸ் 1 சேர்க்கை துவங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.