பல்கலைகள் பயன்படுத்தாத ரூ.1,769 கோடி; வலுக்கட்டாயமாக வாங்கிய கேரளா!
பல்கலைகள் பயன்படுத்தாத ரூ.1,769 கோடி; வலுக்கட்டாயமாக வாங்கிய கேரளா!
UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 07:04 PM
திருவனந்தபுரம்:
அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, கேரள அரசு கருவூலத்திற்கு ரூ.1,769 கோடியை பல்கலைக்கழங்கள் அனுப்பியுள்ளன.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, நிதியாண்டின் இறுதியில் செலவுகளை ஈடுசெய்வதற்காக நிதியில்லாமல் திணறி வருகிறது. மார்ச் 31ம் தேதி வரையில் சுமார் ரூ.30,000 கோடி அரசுக்கு தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு துறைகளில் இருந்து வரவேண்டிய தொகைகளை வசூலிக்கும் முயற்சியில் அம்மாநில நிதியமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
அரசு நிதி எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை கண்டறியவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களின் கணக்கில் பல நூறு கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக நிதியை அரசு கணக்கில் சேர்க்கும்படி பல்கலை நிர்வாகத்தினருக்கு அரசு உத்தரவிட்டது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் பணத்தை செலுத்த தயங்கின. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, பல்கலை அதிகாரிகள் அரசு கூறியதை ஏற்றுக்கொண்டனர்.
தற்போது வரை கேரளாவில் உள்ள 7 பல்கலைக்கழகங்கள் ரூ.1,769 கோடியை அரசு கரூவூலத்திற்கு பணத்தை அளித்துள்ளனர்.