மே.வங்க கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் அமைப்பினர் மோதல்
மே.வங்க கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் அமைப்பினர் மோதல்
UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 06:58 PM
கோல்கட்டா:
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகரில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த கல்லுாரி பேராசிரியர்கள் பொதுக்குழு கூட்டத்தில், மாநில அமைச்சர் பரத்யா பாசு பங்கேற்றார்.
அவருக்கு எதிராக கோஷமிட்ட கம்யூ., மாணவர் அமைப்பினரான எஸ்.எப்.ஐ.,யினரை கண்டுகொள்ளாமல் அமைச்சர் கார் சென்றது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில், சில மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து, அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள், நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரினர். அப்போது நடந்த தகராறில் அமைச்சருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று, அமைச்சர் பரத்யா பாசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கம்யூ., மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அதை எதிர்த்து, திரிணமுல் காங்., மாணவர் அமைப்பினர் பல இடங்களில் போராட்டம் நடத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் பதற்றமான சூழல் நிலவியது.