தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகத்தால் அறிவு செழிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

புத்தகத்தால் அறிவு செழிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

புத்தகத்தால் அறிவு செழிக்கும்: முதல்வர் ஸ்டாலின்


UPDATED : ஏப் 25, 2025 12:00 AM

ADDED : ஏப் 25, 2025 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2025 12:00 AM ADDED : ஏப் 25, 2025 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புத்தகத்தில் உலகை படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாக படித்தால், அனுபவம் தழைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது சமூக வலைதளப் பதிவு:

புத்தகங்கள் புதிய உலகத்திற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை. நாம் சந்திக்காத மனிதர்கள். நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன் புத்தகங்கள். அதனால்தான் சென்னை, மதுரையை தொடர்ந்து, கோவை, திருச்சியில், மாபெரும் நுாலகங்களை எழுப்பி வருகிறோம்.

மாவட்டந்தோறும் புத்தக காட்சிகள், இலக்கிய திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்பு பழக்கத்தை தீவிரமாக, நமது அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம். புத்தகத்தில் உலகை படித்தால், அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us